7 ஆயிரம் நகரங்களில் விளக்குகள் அணைப்பு

கார்பன் பயன்பாட்டை குறைப்பது மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களில் சுமார் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

தனியார் தொண்டு நிறுவன அமைப்பு நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு சீனாவின் ஹொங்கொங், பீஜிங், ஷாங்காய் மற்றும் சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள 7 ஆயிரம் நகரங்களில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள மக்கள் சுமார் 60 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து ஆதரவு தெரிவித்தனர்.

Mon, 03/29/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை