மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழப்பு 500 ஆக அதிகரிப்பு

மியன்மாரில் இதுவரை 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக உள்ளூர்க் கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் என்ற அந்தக் குழு இதுவரை 510 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்று அது அச்சம் தெரிவித்தது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மேலும் 14 பேர் கொல்லப்பட்டனர்.

மியன்மாரில் கடந்த மாதம் முதலாம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டும் என்றும் அரசாங்க ஆலோசகரான ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

இராணுவத்தின் அடக்குமுறையைக் கண்டித்து அமெரிக்கா மியன்மாருடன் அதன் வர்த்தக உறவைத் துண்டித்துக் கொண்டது.

ஐக்கிய நாடுகள் சபை, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும் மியன்மார் நிலவரம் குறித்து தொடர்ந்து அக்கறை தெரிவித்து வருகின்றன.

Wed, 03/31/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை