மெக்சிகோவில் கொரோனா பலி 321,000 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் திருத்தப்பட்ட எண்ணிக்கையை மெக்சிகோ வெளியிட்டுள்ளது.

இதன்படி அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை முன்னரை விடவும் 60 வீதம் அதிகமாக இருப்பதோடு அது உலகின் இரண்டாவது அதிக உயிரிழப்பாக உள்ளது.

புதிய தரவுகளின்படி அந்நாட்டில் கொவிட்–19 தொற்றினால் 321,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் திருத்தத்தின்படி அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிக உயிரிழப்பு பதிவான நாடாக மெக்சிகோ மாறியுள்ளது.

முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த பிரேசிலில் 310,000 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் 549,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சியோவில் போதிய சோதனைகள் இடம்பெறாத நிலையில் அங்கு நோய்ப் பாதிப்பு கூறப்பட்டதை விடவும் அதிகம் என்று நிபுணர்கள் ஏற்கனவே கூறி வந்தனர்.

இந்த பெருந்தொற்றை கையாள்வது தொடர்பில் ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

நோய்த் தொற்றின் தீவிரத்தை அவர் குறைத்து மதிப்பிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதோடு தடுப்பு மருந்து திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கும் ஜனாதிபதி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Tue, 03/30/2021 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை