ரொஹிங்கிய முகாம் தீயில் தொடர்ந்து 300 பேர் மாயம்

பங்களாதேஷில் உள்ள ரொஹிங்கிய அகதி முகாமில் கடந்த வாரம் இடம்பெற்ற பாரிய தீச் சம்பவத்தில் தொடர்ந்து 300 பேர் வரை காணாமல்போன நிலையில் இருப்பதாக ஐ.நா அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பல குடும்பங்களும் இன்னும் ஒன்றிணையவில்லை” என்று ஐ.நா அகதிகள் நிறுவன பேச்சாளர் அன்ட்ரெய்ஜ் மெஹசின் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு கொக்ஸ் பசார் மாவட்டத்தில் உள்ள மக்கள் செறிந்து வாழும் அகதி முகாமில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இடம்பெற்ற இந்த் தீயினால் சுமார் 45,000 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வாழ்ந்து வந்த மூங்கில் மற்றும் பிளாஸ்டிக் கூடாரங்கள் முற்றாக அழிந்தன.

Wed, 03/31/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை