வான் தாக்குதலால் மியன்மாரில் 3,000 பேர் தாய்லாந்துக்கு ஓட்டம்

மியன்மாரின் தென்கிழக்கு கரேன் மாநிலத்தில் இன ரீதியான கிளர்ச்சிக் குழு ஒன்றின் மீது இராணுவம் நடத்திய குண்டு வீச்சை அடுத்து 3,000 பேர் வரை அண்டை நாடான தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாட்டின் கிழக்கு எல்லைக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் ஒரு முகாம் உட்பட முட்ரோ மாவட்டத்தில் ஐந்து இடங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

'அப்போது கிராம மக்கள் காடுகளில் ஒளிந்துகொண்டதோடு 3000 பேர் எல்லை கடந்து தாய்லாந்தில் அடைக்கலம் பெற்றனர்' என்று கரேன் பெண்கள் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மியன்மாரில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tue, 03/30/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை