பிரேசிலில் தினசரி கொரோனா உயிரிழப்பு 3,000ஐ தாண்டியது

பிரேசிலில் கொரோனா தொற்றினால் தினசரி உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முறையாக 3,000ஐ தாண்டியுள்ளது.

இதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுற்ற 24 மணி நேரத்தில் பிரேசிலில் சாதனை எண்ணிக்கையாக 3,251 பேர் உயிரிழந்திருப்பதாக பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரேசிலில் மொத்தம் சுமார் 299,000 பேர் உயிரிழந்திருப்பதோடு உலகில் கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு பதிவான நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ இந்த கொரோனா தொற்றுக்கு பின்னரான காலத்தில் நான்காவது சுகாதார அமைச்சரை நியமித்த அதே தினத்திலேயே உயிரிழப்பு எண்ணிக்கையும் உச்சம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்த நிலையிலும் அந்நாட்டு ஜனாதிபதி அந்த நோய்த் தொற்றை குறைத்து மதிப்பிட்டு வருவது அவர் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்று அதிகரிப்பால் பிரேசில் மருத்துவமனைகள் நிலைகுலையும் நிலையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 03/25/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை