Header Ads

3 மாதங்களுள் 83 யானைகள் உயிரிழப்பு

- வனஜீவராசிகள் அமைச்சு தெரிவிப்பு

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், 83காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு, ரயில் விபத்துகள் மற்றும் இயற்கைக் காரணிகள் என்பனவற்றினால், யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இதேநேரம், காரணத்தைக் கண்டறியமுடியாத மரணங்களும் பதிவாகியுள்ளன. மனிதர்களின் நடவடிக்கைகளால் யானைகள் பாதிக்கப்படுகின்றன. யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  அமைச்சு மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்   மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 03/26/2021 - 15:24


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.