தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயுடன் 2 பவுஸர்கள்

தங்கொட்டுவையில் மடக்கிப்பிடிப்பு

விஷத்தன்மை உள்ளடங்கியதாக இனங்காணப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் என சந்தேகிக்கப்பட்ட இரண்டு எண்ணெய் பவுஸர்கள் தங்கொட்டுவ பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து இவ்வாறு 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பவுஸர்கள் இரண்டின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராகம பகுதியிலுள்ள களஞ்சியசாலையிலிருந்து கடந்த 25 ஆம் திகதி தேங்காய் எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பவுஸர்களிலுள்ள எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Wed, 03/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை