Header Ads

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; ஏப்ரல் 21க்கு முதல் குற்றவாளிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும்

- இன்றேல் நாடு தழுவிய எதிர்ப்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளை எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.  

அவ்வாறு எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படாவிட்டால் நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார். 

திருப்பலிப் பூசை ஒன்றின் பின்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

எத்தகைய சக்திகள் செயற்பட்டாலும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை தாம் மக்களுடன் அணி திரள்வதாகவும் தெரிவித்துள்ள பேராயர், நீதி நிலைநாட்டப்படுவதை காணவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பேராயர்,எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்பதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் மேற்கொள்ளப் போகும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் பலமானதாகவும் நாடு தழுவியதாகவும் அமையும்.  

ஆகக் குறைந்தது எந்த பாரபட்சமுமின்றி சம்பந்தப்பட்ட ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் அதனை மேற் கொள்ளாவிடில் தொடர்ச்சியான எதிர்ப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 03/23/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.