ரி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

ரி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்-3rd-T20-SLvWI-WI Won the 3 Match Series as 2-1

சுற்றுலா இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ரி20 தொடரை, மேற்கிந்திய தீவுகள் அணி, 2-1 என கைப்பற்றியுள்ளது.

இன்று (08) இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெற்ற முடிவைத் தீர்மானிக்கும் போட்டியை 3 விக்கெட்டுகளால் (6 பந்துகள் மீதம்) வென்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, இத்தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 10 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.

இலங்கை அணி அதன் 4 விக்கெட்டுகளையும் 46 ஓட்டங்களில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினேஷ் சந்திமால் 54 (46)*
அஷேன் பண்டார 44 (35)*

Image

fபேபியன் அலன், கெவின் சின்கலயர், ஜேஸன் ஹோல்டர், ஒபட் மெக்கொய் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

லெண்டில் சிம்மன்ஸ் 26 (18)
நிக்கொலஸ் பூரன் 23 (18)
fபேபியன் அலன் 21 (06)

இலங்கை அணி சார்பில் லக்‌ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும், வணிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இத்தொடரின் 3 போட்டிகளிலும் தலா 4 ஓவர்கள் வீசிய வணிந்து ஹசரங்க 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 12 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற வேண்டி இருந்த நிலையில், சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சய வீசிய 19ஆவது ஓவரை எதிர்கொண்ட fபேபியன் அலன் 3 ஆறு ஓட்டங்களைப் பெற்றதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்ட நாயகனாக, 6 பந்துகளில் 21 ஓட்டங்கள் மற்றும் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய பேபியன் அலன் தெரிவானார்.

Mon, 03/08/2021 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை