இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 19 முதல் ஆரம்பம்

- இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் விசேட மருத்துவ நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள வர்களுக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதற்காக கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு தொகை

தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து விரைவில் கிடைக்கப் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை சீனாவிலிருந்து தருவிக்கப்படவுள்ள தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கிடைக்கும் என்றும் அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான ஓடர்கள் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தடுப்பூசிகளும் விரைவில் நாட்டுக்கு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Wed, 03/31/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை