183 வருட வரலாற்றைக் கொண்ட கிராண்ட் ஒரியண்டல் பிரதமரால் நேற்று திறப்பு

தொல்பொருள் பெறுமதிவாய்ந்ததும்183ஆண்டு கால வரலாற்றை கொண்டதுமான கொழும்பில் அமைந்துள்ள கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டல், புனரமைக்கப்பட்ட பின்னர் நேற்று (18) மாலை 6.00மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீள திறக்கப்பட்டது.  

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள செலன்டிவா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் இலங்கை அரச கூட்டுத்தாபனம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 225மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு நகரின் பழைமை வாய்ந்த கட்டிடங்களை அவற்றின் தொல்பொருள் மதிப்பு பாதுகாக்கும் வகையில் புனரமைக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டல் அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும்.  

Fri, 03/19/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை