17 பக்க தீர்மானத்தில் 15 பக்கம் அரசுக்கு எதிரானவை

பாராளுமன்றத்தில் லக்ஷ்மன் சுட்டிக்காட்டு

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 பக்கங்களை கொண்ட தீர்மானத்தில் 15 பக்கங்களில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 கீழ் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய தினேஷ் குணவர்தனவின் உரையின் பின்னரே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கையில் 2 பக்கங்கள் யுத்தம் தொடர்பான விடயங்கள் உள்ளன. மிகுதி 15 பக்கங்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், ஊடகச்சுதந்திரம் மீறல், இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்விக்கும் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களே வலியுறுத்தப்பட்டுள்ளன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 03/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை