மெக்சிகோவில் பொலிஸார் மீது அதிரடித் தாக்குதல்: 13 பேர் பலி

மத்திய மெக்சியோகவில் குற்றக் கும்பல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரிகள் பொலிஸ் வாகனத் தொடரணி மீது நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட அனைவரும் பொலிஸார் மற்றும் அரச வழக்கறியர் அலுவலக அதிகாரிகளாவர்.

மெக்சிகோ மாநிலத்தின் கோடபெக் ஹரினஸ் என்ற மாநகரப் பகுதியிலேயே இந்த திடீர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் வாகனங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பது மற்றும் வீதி ஓரத்தில் உடல்கள் இருக்கும் படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

மெக்சிகோ மாநிலம், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகாமையில் இருப்பதோடு அதிக குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியாகவும் நாட்டின் அதிக வன்முறை கொண்ட பிராந்தியமாகவும் உள்ளது.

மெக்சிகோவில் கடந்த ஆண்டில் 500க்கும் அதிகமான பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் குற்ற கும்பல்கள் இயங்கி வரும் பகுதியில் பொலிஸார் ரோந்து செல்லும்போதே தற்போதைய தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Sat, 03/20/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை