இதுவரை 138 நாடுகளில் தடுப்பு மருந்து பயன்பாடு

கொவிட்–19 தடுப்பூசிகள் 138 நாடுகளில் போடப்பட்டு வருகின்றன.

நோய்ப்பரவலை எதிர்ப்பதற்குத் தடுப்பூசிகள் தான் சிறந்த அரண் என்று கருதப்படுவதால் உலக நாடுகள் அதன் குடிமக்களுக்குத் தடுப்பூசிகளை வேகமாகப் போட ஆரம்பித்துள்ளன.

மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசிகள் போடும் பணியைக் கணக்கிட்டால் சிலியில் தடுப்பூசிகள் போடும் வேலைகள் துரிதமாக உள்ளன. சிலியில் சராசரியாக ஒரு நாளுக்கு 100,000 நபர்களில் 1,299 பேருக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

தடுப்பூசிகளைத் தயாரிப்பதிலும் பெறுவதிலும் மக்களுக்குப் போடுவதிலும் வளர்ந்த, பணக்கார நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களில் சுமார் 60 வீதத்தினர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

Sun, 03/28/2021 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை