கார் - டிரக் மோதி 13 பேர் உயிரிழப்பு

அமெரிக்க–மெக்சிகோ எல்லைக்கு அருகில் தெற்கு கலிபோர்னியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கார் மற்றும் டிரக் வண்டிகள் மோதி குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

எட்டு அல்லது ஒன்பது பேர் செல்லக்கூடிய அந்தக் கார் வண்டியில் விபத்து இடம்பெறும்போது இருபத்தி ஐந்து பேர் பயணித்துள்ளனர். இந்த கார் டிரக் வண்டி செல்லும் வழியில் நேராக குறுக்கிட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிரக் வண்டி ஓட்டுநர் சிறு காயத்திற்கு உள்ளாகி உள்ளார். சம்பவ இடத்திலேயே 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்தில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இந்தக் கார் வண்டியில் இருந்திருப்பதாக கலிபோர்னிய நெடுஞ்சாலை கண்காணிப்புத் தலைவர் ஒமர் வொட்சன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Thu, 03/04/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை