மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் மேலும் 11 பேர் சுட்டுக்கொலை

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனநாயக ஆதரவாளர்களை ஒடுக்கி வரும் இராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மார் தூதர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் மேலும் மேலும் துன்பத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில் அந்த நடவடிக்கை அமைய வேண்டும் என்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் கேட்டுக் கொண்டார்.

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக ஒரு மாதத்திற்கு மேல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் யங்கூனில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதை அடுத்து, இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ஊரடங்கை மீறி வெளியே வந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அடித்ததாகவும் குறிப்பிடப்பட்டது. சிலர் வீடுகளிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, கம்புகளால் அடிக்கப்பட்டதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

வீடுகளுக்கு உள்ளேயும் சத்தம் கேட்டதாக அவர்கள் கூறினர். வெளியே கொண்டு வரப்படும் முன் வீட்டிற்குள்ளும் அவர்கள் அடிவாங்கியிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.

Mon, 03/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை