இன்று முதல் மேலும் 10ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

இன்று முதல் மேலும் பட்டதாரிகள் 10ஆயிரம் பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 60ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லாட்சியில் நியமனம் வழங்கப்பட்ட 14ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10ஆயிரம் பேரை நிரந்தர சேவையில் இணைக்க இன்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளோம்.கொரோனா தொற்றினால் அவர்களை அரச சேவைக்கு இணைக்கும் பணி தாமதமானது.

அவர்களின் ஆவணங்களை பெற்று நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.மாவட்ட செயலாளர் அலுவலக மட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்படும்.இவர்களின் பெயர்ப்பட்டியல் அமைச்சு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

ஷம்ஸ் பாஹிம்

 

Mon, 03/22/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை