1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; ஜனாதிபதி, பிரதமருக்கு ஜீவன் நன்றி தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் 1,000ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு மதிப்பளித்து அந்த வேண்டுகோளை நிறைவேற்றிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட தொழில் ஆணையாளர் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தோட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்த உரிமைகள் உள்ளிட்ட அவர்களது நாளாந்த வேதனத்தை அன்று முதல் இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. 1992ஆம் ஆண்டு முதல் இன்று வரை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அந்தந்த காலங்களில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை இ.தொ. கா உறுதிப்பட பெற்றுக்கொடுத்து வந்துள்ளது. அந்த வகையில் இ.தொ.கா வுக்கு மதிப்பளித்து வேண்டுகோளை நிறைவேற்றிய நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தொழில் ஆணையாளர் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Thu, 03/11/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை