ரூ.1000 சம்பளம் தொடர்பான வர்த்தமானி; இரத்து செய்ய கோரிய வழக்கு 26க்கு ஒத்திவைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானியை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி மேற்கொள்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.   20பெருந்தோட்டக் கம்பனிகள் இணைந்து மேற்படி மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தன. 

மனு மீதான விசாரணை நேற்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது எதிர்வரும் 26ஆம் திகதி தகவல்களை உறுதிப்படுத்துமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வழக்கில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தேயிலை கைத்தொழில் தொடர்பான சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18பேருக்கு எதிராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

 

 

Tue, 03/23/2021 - 06:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை