மேல் மாகாணத்தில் கத்தோலிக்க தனியார், சர்வதேச பாடசாலைகள் ஏப்ரல் 05 ஆரம்பம்

மேல் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.  

அதற்கிணங்க கொழும்பு உயர் மறைமாவட்டத்திலுள்ள கத்தோலிக்க மற்றும் சர்வதேச பாடசாலைகளே ஏப்ரல் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அத்துடன் தற்போது கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் 5, 11மற்றும் 13தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அது தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து ஆரம்ப அரச பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

அதற்கிணங்க மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.  

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 19ஆம் திகதியே கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படும் என ஏற்கனவே கல்வியமைச்சு தீர்மானத்தை அறிவித்திருந்த நிலையில்  அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

Fri, 03/26/2021 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை