மனித உரிமை மீறல்கள் மிச்​செலின் அறிக்கையை நிராகரிக்க அரசு தீர்மானம்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையை நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் காணப்படும் நிபந்தனைகளை மீறும் வகையில் தற்போதைய ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் நேற்றைய தினம் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,.. மேற்படி அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க வுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதனை பகிரங்கப்படுத்தவுள்ளார் என்றும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவித நம்பகமான ஆதாரங்களும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்;

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் வகையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 02/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை