டிரம்பின் குற்ற விசாரணையை தொடர்வதற்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான குற்ற விசாரணை சட்டபூர்வமானது என்று அங்கீகரித்திருக்கும் செனட் சபை அந்த விசாரணையை தொடர ஒப்புதல் அளித்துள்ளது.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி இருப்பதால் இந்த விசாரணை தேவை இல்லாதது என்று அவரை தற்காத்து பேசும் தரப்பு வாதிட்டது.

எனினும் இந்த விசாரணையை தொடருவதற்கு செனட் சபையில் 56–44 என பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. இதற்கு கணிசமான குடியரசுக் கட்சியினர் ஆதரவு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அமெரிக்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைக்கு டிரம்ப் துண்டுதலாக இருந்ததாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றியை மறுக்கும் வகையில் மோசடி இடம்பெற்றதாக டிரம்ப் ஆதாரமின்றி கூறி வந்த நிலையிலேயே அவரின் ஆதாரவாளர்கள் பாராளுமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த குற்றவிசாரணை செனட் சபைக்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது டிரம்ப் ஜனவரி 6 ஆம் திகதி ஆற்றிய உரையில் அவர் கிளர்ச்சியைத் தூண்டியதற்கான ஆதாரங்களை ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்தனர். இது பற்றிய வீடியோவும் காண்பிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதியை இட்டுச் செல்வது சட்டவிரோதமானது என்று வாதிடும் டிரம்பின் வழக்கறிஞர்கள், இது ஜனநாயகக் கட்சியனரின் அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த குற்றவிசாரணையில் இருந்து தப்பிப்பதற்கு செனட்டில் டிரம்புக்கு தற்போதைய நிலையில் போதுமான குடியரசு கட்சியனரின் ஆதரவு உள்ளது. 100 இடங்கள் கொண்ட செனட்டில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு தேவைப்படுகிறது.

இதன்படி தீர்மானம் வெற்றிபெற 67 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போது குடியரசு கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் மட்டுமே டிரம்புக்கு எதிராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் டிரம்ப் குற்றங்காணப்பட்டால் அவர் மீண்டும் அரச பதவிகளை வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளார்.

Thu, 02/11/2021 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை