ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த பூகம்பம்

ஜப்பானின் புக்குசிமா கரையோரப் பகுதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த பூகம்பம் பதிவாகியுள்ளது. 2011 சுனாமி அனர்த்தத்தின் 10 ஆண்டு நிறைவுக்கு ஒரு சில வாரங்கள் இருக்கும்போதே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

7.3 ரிச்டர் அளவில் பதிவான இந்த பூகம்பம் டோக்கியோ நகரிலும் உணரப்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இதில் 50 பேர் வரை காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

18,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட 2011 சுனாமியை ஏற்படுத்திய பூகம்பம் ஏற்பட்ட மையப்புள்ளிக்கு அருகிலேயே தற்போதைய பூகம்பமும் பதிவாகி உள்ளது. கடற்படுகைக்குக் கீழே, சுமார் 55 கிலோமீற்றர் ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததால் சுனாமி ஏற்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.

பூகம்பத்திற்கு பின்னரான சிறு அதிர்வுகள் பதிவாகி வருவதால் அவதானத்துடன் இருக்கும்படி கோரப்பட்டுள்ளனர். சிலர் தற்காலிக முகாம்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

Mon, 02/15/2021 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை