பொத்துவில் - பொலிகண்டி போராட்டம்; தடையுத்தரவு விதிக்க சுகாதார அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்க கோருகிறது நீதிமன்று

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் பொலிசார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி இன்று வெள்ளிக்கிழமை வரை விசாரணையை ஒத்திவைத்து மல்லாகம் நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிசார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் இன்று பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் பொலிசாரால் நேற்று முன்தினம் மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

போராட்டங்கள் நடத்தப்படுவதால் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று இன்று சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிசார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் இன்று பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தவணையிட்டது.

யாழ்.விசேட நிருபர்

Fri, 02/05/2021 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை