ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பக்கச்சார்பானது

- வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பக்கச்சார்பானது என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது என வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரபாகரனும் அவரது நண்பர்களும் பிரபாகரனின் மகளுக்கு வைர மோதிரங்களை அணிவித்து மகிழ்ச்சி கண்டபோது, அப்பாவி தமிழ் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிட்டு சிறுவர் படையினராக மாற்றினர் என்றார்.

கண்டி குண்டசாலை பிரதேச செயலகத்தில் நேற்று ( 25) நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

அப்பாவி தமிழ் குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்குவதற்குப் பதிலாக துப்பாக்கிகளை ஒப்படைப்பதன் மூலம் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவது குறித்து மனித உரிமை ஆணைகுழுவோ அல்லது வேறேதும் அமைப்புகளோ இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இலங்கைக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டதும் ஆதாரமற்றதுமான முறையில் மனித உரிமைகளுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதாகவும், அப்பாவி தமிழர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மீது பிரபாகரனும் அவரது சகாக்களும் அளித்த அழுத்தம் மனித உரிமை மீறல் இல்லையா? எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

மேலும் போரின் கடைசி நாட்களில் இங்கிலாந்தின் லோட் நெஷ்பி மற்றும் அமெரிக்காவின் ஸ்மித் இருவரும் இலங்கையின் தினசரி அறிக்கைகளிலிருந்து துல்லியமான தகவல்களைப் பெற்றுள்ளனர்.

இதை மனித உரிமை ஆணைக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிடடார்.

எம்.ஏ.அமீனுல்லா

Fri, 02/26/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை