கியூபாவில் அதிக தனியார் வர்த்தகங்களுக்கு அனுமதி

கியூபாவின் வரலாற்றில் முதல் முறையாக பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்திருத்தமாக, தன் நாட்டின் பெரும்பாலான தொழில்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கியூபாவில் 127 வகையான தொழில்களில் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இருந்து வரும் நிலையில், அது தற்போது 2,000க்கும் மேற்பட்ட தொழில்களாக அதிகரித்து அனுமதி வழங்கப்படுவதாக கியூபாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மார்டா எலெனா பிடோ கூறினார்.

இதன் மூலம், மிகக் குறைவான தொழில்துறைகள் மட்டுமே அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் கியூபா பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கம்யூனிச நாடான கியூபாவின் பொருளாதாரம் 11 வீதம் சரிவை சந்தித்தது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவாகும். இந்த சூழலில் அங்கு அடிப்படை பொருட்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

Mon, 02/08/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை