பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் அமைச்சர் சுதர்சனி

சுகாதார தரப்பின் ஆலோசனை, வழிகாட்டலை பின்பற்றவும் கோரிக்ைக

பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை வைரஸ் நாட்டிற்குள் பரவுவதைத் தடுப்பதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டு மக்கள் சுகாதார துறையினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை முறையாகவும் தொடர்ச்சியாகவும் பின்பற்றுவது மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்று இலங்கையில் நான்கு பிரதேசங்களில் புதிதாக இனம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் நமது நாட்டில் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் ஆலோசனைகளை தெரிவித்துள்ளது.

புதிய வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன் புதிய நோயாளிகளை இனங்காண்பது சம்பந்தமான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் அந்த வகையில் நாளாந்தம் இனங்காணும் நோயாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நாளாந்தம் சுமார் 1200 பேர் வரை அவ்வாறு இனம் காணப்பட வேண்டியது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதற்கிணங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 02/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை