தடுப்பூசிகளின் பக்கவிளைவுக்கு உலக சுகாதார அமைப்பு இழப்பீடு

கொவிட்–19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எதிர்நோக்கக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்க உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், 92 ஏழை நாடுகளுக்குக் கொவிட்–19 தடுப்புமருந்தை நிறுவனம் விநியோகிக்கிறது. தடுப்புமருந்தைப் பெறும் அரசாங்கங்களின் முக்கியமான கவலையை நிறுவனத்தின் அறிவிப்பு போக்கியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்கும் ஒரே சர்வதேச முயற்சி இதுவென உலக சுகாதார அமைப்பு கூறியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாக, வெளிப்படையாக, துரிதமாக இழப்பீடு வழங்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்தது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் பலதரப்பட்ட அமைப்புகளும் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும். இதன்மூலம் உலகளாவிய ரீதியில் தடுப்பு மருந்து விநியோகத்தில் சமநிலைப் போக்கை பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அனைத்து தடுப்பு மருந்துகளினதும் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் வகையில் ஒழுங்குமுறையான ஒப்புதல் அல்லது அவசர பயன்பாட்டுக்கான அதிகாரத்தை பெற்றிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு உறுதி அளித்துள்ளது.

Wed, 02/24/2021 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை