சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவின் முடிவே இறுதியானது

அதன் பிரகாரமே அரசாங்கம் செயற்படும்

முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்யும் தீர்மானம் தொடர்பிலான யோசனை தொழில்நுட்பக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுதான் தீர்மானத்தை எடுக்குமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோப்புள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் பாராளுமன்ற உறுப்பினர் முஜிப்புர் ரஹ்மான், விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போது,

முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எப்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென துறைசார் அமைச்சர் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவாரா? எனக் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோப்புள்ளே, இவ்வாறு பதலளித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சில் நாம் தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எடுப்பதில்லை. தொழில்நுட்ப குழுதான் தீர்மானங்களை எடுக்கும். இந்த யோசனை தற்போது தொழில்நுட்பக் குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் தீர்மானங்களின் பிரகாரம் தான் அரசாங்கம் செயற்படும் என்றார்.

சம்ஷ் பாயிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை