கொரோனா தொற்றிலிருந்து மருத்துவர்களை பாதுகாக்கும் ஆலோசனை சுகாதார அமைச்சுக்கு

கொரோனா வைரஸிலிருந்து மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் முறையான ஆலோசனைகள் அடங்கிய திட்டமொன்றை சுகாதார அமைச்சுக்கு கையளிக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸினால் முதலாவது மருத்துவர் இலங்கையில் மரணமடைந்துள்ள நிலையில் அதனை கவனத்திற் கொண்டு மேற்படி ஆலோசனைக் கோவையை தயாரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்புச் செயலாளர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தியா அன்பளிப்பாக வழங்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த ஆறு தினங்களில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள 711 வைரஸ் தொற்று நோயாளர்களின் கொழும்பில் மாத்திரம் 236 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள , சங்கம் நாளாந்தம் வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 02/05/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை