'பைசர்' தடுப்பூசியை சாதாரண உறைநிலையில் வைக்க ஒப்புதல்

பைசர் நிறுவனத்தின் கொவிட்–19 தடுப்புமருந்தைச் சாதாரண

உறைநிலையில் வைத்துப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்தாக்கத்திற்குப் பயன்படும் குளிர்பதனப் பெட்டிகளின் உறைநிலையில் தடுப்புமருந்தை வைக்கலாம் என்று அந்நாட்டு உணவு, மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதை உறைநிலைக்குக் கீழ் 4 டிகிரி செல்ஸியஸில் வைத்து இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்த முடியும்.

பைசரின் தடுப்புமருந்து, இதற்கு முன்னர், உறைநிலைக்குக் கீழ் 80 டிகிரி செல்ஸியஸுக்கும் 60 டிகிரி செல்ஸியஸுக்கும் (-80 முதல் -60)இடையிலான தட்வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

விதிமுறைகள் தளர்த்தப்படுவதால் தடுப்புமருந்துகளை வைத்துக்கொள்வதற்கான சிறப்பு உறையவைக்கும் கருவிகளை இனி வாங்க வேண்டியதில்லை.

தடுப்புமருந்துகளை இனி கூடுதல் இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்று நிபுணர்கள் கூறினர்.

தடுப்புமருந்துகளின் ஆற்றல், சற்று மிதமான தட்வெப்பநிலையிலும் நிலையாக இருக்கும் என்று பைசர் நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்தது.

அதனையொட்டி அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்திற்கு நிறுவனம் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை