வசதி இல்லாதோருக்கு இலவச விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு

- விரைவில் அனைவரும் அழைத்து வரப்படுவர்

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் நிலவும் இடவசதி பற்றாக்குறை காரணமாகவே வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்படுவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கு வசதியாக நாட்டின் 09 மாகாணங்களிலும் ஒன்பது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் அந்த மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிதியில் அந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அது தொடர்பில் கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 02/04/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை