பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ் சேவைகள் கட்டாயம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கான 'சிசு செரிய' பஸ் சேவையை கட்டாயமாக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு மார்ச் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை மேற்படி பஸ் சேவைகளை கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் அனைத்து சிசு செரிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்றும் குறித்த பஸ்களில் பிற பயணிகளை ஏற்றிச்செல்ல கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் சில மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 02/27/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை