நெருக்கடிகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்த செயற்பாடு அவசியம்

- பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை உலக சர்வாதிகாரிகளிடம் கடன்காரர்களாக்கியமை மற்றும் மக்களை பிளவுபடுத்தியுள்ளமை தொடர்பில் தொடர்ந்து நாட்டை ஆட்சி புரிந்த அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டிய விஷேட திருப்பலி கொழும்பு புஞ்சி பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் நேற்று நடைபெற்றது.

திருப்பலியில் மறையுரையாற்றும் போதே பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பேராயர்;

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று
அதன்மூலம் சொகுசு வாழ்வை அனுபவிக்க எம்மால் முடியாது. கடந்த இருபது முப்பது வருடங்களாக எமது வளங்களை விற்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

எமக்குத் தெரியாத பொருளாதார முறையொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்த முயன்று எமது நாட்டை சில உலகநாடுகளுக்கு கடன்காரர்களாக்கும் நிலையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் எமது நாட்டை ஆண்ட தலைவர்கள் தவறான பாதையில் பயணித்தமையே. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 02/05/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை