ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை நிறுத்தியது தென்னாபிரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றின் தென்னாபிரிக்க திரிபுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து போதிய செயல்திறனை வெளிக்காட்டாத நிலையில் அந்த மருந்தை செலுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவில் 90 வீதமான கொரோனா சம்பவங்கள் புதிய மரபணு மாற்றம் கொண்டவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனக்கா மருந்துகளை பெற்றிருப்பதோடு அடுத்த வாரம் அதனை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டிருந்தது.

ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தின் செயல்திறன் பற்றி இன்னும் தெளிவினை பெறும் வரை காத்திருப்பதாக தொன்னாபிரிக்க சுகாதார அமைச்சர் சுவேலி மிகைஸ் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் மற்றும் பைசர் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகள் அடுத்த சில வாரங்களில் பெறப்படவிருப்பதாகவும் தென்னாபிரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து தென்னாபிரிக்க புதிய திரிபின் சிறிய மற்றும் நடுத்தரமான நோய் பாதிப்புக்கு போதுமான அளவு செயலாற்றுவதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்துவதில் மற்ற தடுப்பூசிகளைப் போலவே தங்கள் தயாரிப்பும் செயலாற்றுவதால், கடுமையான நோய்க்கு எதிராக அது பாதுகாப்புத் தரும் என்று அஸ்ட்ராசெனக்கா தெரிவித்தது.

தேவையெனில் எதிர்வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளுக்கு சிறந்த முறையில் செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை மறு வடிவமைப்புச் செய்யலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tue, 02/09/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை