இராணுவ மருத்துவமனையில் நேற்று எம்.பிமார்களுக்கு தடுப்பூசி

சிலர் தவிர்ப்பு; சிறை அதிகாரிகளுக்கும் ஊசி

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்றுக்காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை சில அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை நிராகரித்துள்ளனர்.

முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களுக்கு முதலில் அதனைப் பெற்றுக் கொடுக்குமாறும் பின்னர் தாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரே இவ்வாறு நேற்று தடுப்பூசியை நிராகரித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைக்கிணங்க தமக்கு தடுப்பூசி அவசியமில்லை என மனுச நாணயக்கார எம்.பி.தெரி வித்துள்ளார்.

10 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கிய பின்னரே தான் தடுப்பூசி பெறுவதாக ஹரீன் பெர்ணாந்து கூறியுள்ளார்.

நேற்று அமைச்சர்கள் சிலரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இராணுவ மருத்துவமனைக்கு வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளதுடன் சுமார் 5100 அதிகாரிகளுக்கு மேற்படி தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 02/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை