Header Ads

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் பணிப்பு

மேல் மாகாணத்தில் கைத்தொழில்கள் ஆரம்பம்

மேல் மாகாணத்தில் கைத்தொழில்களை ஆரம்பிக்க முன்வந்துள்ள 150க்கும் அதிகமான முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்குத் தடையாக இருந்த கைத்தொழில் நகரத்தை ஆரம்பிக்க போதுமான அரச காணிகள் இல்லாமை பிரச்சினையாகக் காணப்பட்டது. அதனை பிரச்சினையாகக் கருதாமல் குறைந்தபட்சம் 5 ஏக்கர் காணியாவது அரசு பெற்றுக்கொடுக்குமானால் கொழும்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் புதிய முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில்களை ஆரம்பிக்க முடியும் என தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட தேசிய உற்பத்தி தொழிலை மேம்படுத்தும் அபிவிருத்தி குழுக்கூட்டத்துக்கு தலைமை வகித்த போதே இதனைக் கூறினார்.

கிராமிய பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த தேசிய உற்பத்தி தொழில் மேம்பாட்டு அபிவிருத்திக்குழு அமைக்கப்பட்டுள்ளதோடு தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகிய அமைச்சரவை அமைச்சர்களின் தலைமையில் அக்குழு செயல்படுகின்றது.

கொழும்பு மாவட்ட கூட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தமது அமைச்சின் கீழுள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மூலம் கைத்தொழிலாளர்களுக்கு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்க முடியுமெனவும் நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில் முனைவோருக்கு வழி காட்டுவதோடு விசேடமாக நுண் மற்றும் சிறிய அளவிலான மகளிர் தொழில் முனைவோருக்கு பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்க தேசிய தொழில் முனைவோர் அதிகார சபையால் முடியுமெனவும் தெரிவித்தார்.

மேட் இன் ஸ்ரீலங்கன் திட்டத்தின் கீழ் இணையதள சந்தைப்படுத்தல் நுழைவொன்றும் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tue, 02/23/2021 - 13:22


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.