குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு துரிதமாக குடிநீர் வழங்க பணிப்புரை

குடிநீர் வசதியில்லாத பாடசாலைகளுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது இலங்கையில் பல பிரதேசங்களில் இந்நிலைமை காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் இது தொடர்பாக முக்கியத்துவம் வழங்கி விரைவாக தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

நீர் வழங்கல் அமைச்சில் நடைபெற்ற முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் இது தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே மாகாண கல்விப் பணிப்பாளர்களிடம் குடிநீர் வசதிகளற்ற பாடசாலைகளை கண்டறிந்து அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நீர் விநியோகத்துக்கு தேவையான உபகரணங்களை நீர் வழங்கல் சபை மற்றும் நீர் வழங்கல் திணைக்களம் மூலம் பெற்றுக் கொடுக்கவும் பாடசாலை அபிவிருத்தி சபையால் தொழிலாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொடுப்பதன் மூலம் விரைவாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளரினது ஒப்புதலும் ஒத்துழைப்பும் கிடைக்குமென நீர் வழங்கல் அமைச்சரின் செயலாளரும் தெரிவித்துள்ளார்.

Tue, 02/16/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை