ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு; நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு

ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக அனைவரும் சமுகமளித்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவையடுத்து புதிய தவிசாளர் தெரிவு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகள் நடைபெறுவதற்காக ஆரையம்பதி பிரதேச சபையின் சபா மண்டபத்துக்கு அனைவரும் வருகை தந்திருந்தனர். இதன் போது கூட்டத்தை ஆரம்பித்த கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு செய்வதற்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் (11) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் அறிவித்தார்.

இதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றதுடன் அனைவரும் கலைந்து சென்றனர். மேற்படி கூட்டத்துக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ் மற்றும் ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் உட்பட அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். புதிய தவிசாளர் தெரிவுக்கு எதிரான வழக்கை ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.மகேந்திரலிங்கம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்து இடைக்கால தடையுத்தரவை பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இது தொடர்பான அடுத்த வழக்கு 23ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி பிரதேச சபையின் தவிசாளராக எம்.மகேந்திரலிங்கம் இருந்து வந்த நிலையில் அவர் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தமையும் இந்த சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Sat, 02/13/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை