Header Ads

தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டம்

- ம.ம.மு பூரண ஆதரவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு கட்சி, தொழிற்சங்க பேதங்களை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03) காலை நுவரெலியாவில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் எங்களுடன் கலந்துரையாடவில்லை என்றாலும் தொழிலாளர் நலன்சார்ந்து இந்த போராட்டம் நடைபெறுவதாலும் தொழிலார்களின் ஒற்றுமையையும் அவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்.

Thu, 02/04/2021 - 11:28


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.