அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்

ஒலுவில் பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியால்,   அப்பிரதேசத்தில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் (01) இரவு 11 மணியளவில் இந்தச் சூறாவளி வீசியது.

இதனால் இப்பகுதியில் இருந்த விவசாய விரிவாக்கல் நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

மேலும் இங்கிருந்த  இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் மாற்றியும் சேதமடைந்துள்ளதாக மின்சார சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

பாரிய மரங்கள் பல அடியோடு சரிந்து விழுந்ததுடன், வீடுகளின் கூரைகளும் காற்றில் வீசி எறியப்பட்டன.

அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியின் ஒலுவில் மற்றும் பாலமுனைப் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சில மின்கம்பங்களும்  உடைந்து காணப்படுகின்றன. இதனால் ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகளில் சில மணி நேரம் மின்துண்டிப்பு ஏற்பட்டது.

கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Wed, 02/03/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை