பிரதமர் மஹிந்த தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டுமென்று கூறவில்லை

- மன்னிப்பு கேட்கக் கோரும் கருத்திற்கு அமைச்சர் விமல் பதில்

தம்மை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமாறு பொதுஜன பெரமுன தரப்பில் விடுக்கப்படும் அறிவிப்புக்கு அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று பதில் வழங்கியுள்ளார்.

நீர்கொழும்பு நீதிமன்றில் நடைபெற்ற வழக்கொன்றில் ஆஜரான அவரிடம் இது பற்றி வினவப்பட்டது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் பெப்ரவரி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால், பொதுமக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அதேபோல கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வேண்டும் என கூறி, அதனை யதார்த்தமாக்கி வெற்றி பெற செய்தமை தவறென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க நான் தயார் எனவும் கூறினார். கூட்டமைப்பில் காணப்படும்
பெரும் கட்சியான பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இதனை கூறினேனே தவிர மஹிந்த ராஜபக்ச தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என அது பொருள்படாது.

மஹிந்த ராஜபக்ச தலைவராக செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் கட்சியில் உயர் பதவி ஒன்றை வழங்கினால் தற்போதைய அரசியல் பலம் மேலும் வலுவடையக்கூடும் என்பதோடு, அரசாங்கத்தின் நகர்வு மற்றும் நாட்டிற்கு அது சிறந்ததாக அமையும் . வேறு கட்சியில் உள்ளார் என்பதற்காக ஏனைய கட்சிகளை விமர்சிக்க முடியாது என சட்டம் இல்லை என கூறிய அமைச்சர் , அரசியலமைப்பிலும் கருத்து சுதந்திரம் வரையறுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

Wed, 02/10/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை