ஆஸியில் தடுப்பு மருந்து வழங்கும் பணி ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் நேற்று ஆரம்பமான கொவிட்–19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது முதல் பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஆரம்பமாக வேண்டியிருந்த தடுப்பூசித் திட்டம், ஒரு நாளுக்கு முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்துக்குள் 4 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மோரிசனுடன் நாட்டின் மூத்த மருத்துவ அதிகாரி போல் கெல்லியும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். தட்பநிலையின் கீழ் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகள், நாடெங்கிலும் உள்ள 16 தடுப்பூசி களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இன்று அவற்றிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு அவை விநியோகிக்கப்படும்.  

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அவுஸ்திரேலியாவில் இதுவரை 28,920 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 909 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 02/22/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை