ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னிக்கு சிறை தண்டனை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னிக்கு ஆதரவாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1,400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஸ்கோவில் கலகமடக்கும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்வது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 44 வயதான நவல்னிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிகளை மீறியதற்காக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்தது. இந்த வழக்கு சோடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் நஞ்சூட்டப்பட்ட நிலையில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவந்த நவல்னி கடந்த ஜனவரி மாதம் நாடு திரும்பியபோது விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நஞ்சுட்டும் உத்தரவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே பிறப்பித்ததாகக் கூறு நவல்னி, அவரை 'விசம் கொண்டவர்' என்று வர்ணித்தார். இந்தக் குற்றசாட்டை ரஷ்ய அரசு மறுத்தது.

நவல்னி மீது கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரை உடன் விடுவிக்கும்படி வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய மொஸ்கோவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதோடு பலரையும் கைது செய்தனர்.

இரண்டாவது மிகப்பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் சிறு நகரங்களிலும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

Thu, 02/04/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை