இலங்கையின் பங்காளராக, நண்பராக பணியாற்றுவோம்

அமெரிக்க ஜனாதிபதி சுதந்திர தின வாழ்த்து

இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்து-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துதல் தொடர்பில் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒரு பங்காளராகவும் நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றை தோற்கடிக்கவும் உலகப் பொருளாதார நிலையை வழமைக்கு கொண்டு வருவதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அயராது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 02/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை