அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தயாரிப்பு பணி நிறைவு

- துறைமுக அதிகாரசபை தலைவர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில்ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு அதன் அறிக்கை தயாரிப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் துறைமுக சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை கொரோனா சூழ்நிலை காரணமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் ஜனாதிபதிக்கு 6 யோசனைகளை முன் வைத்துள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழு தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.

அதேவேளை, துறைமுக சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிறகடனப்படுத்தியுள்ள நிலையில் துறைமுக ஊழியர்களின் சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தமது சட்டப்படி வேலை தொடரும் எனவும் தொடர்ச்சியாக இந்த வாரமும் தொழிற்சங்க போராட்டம் பலமானதாக முன்னெடுக்கப்படும் என்றும் துறைமுக சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை கிழக்கு முனையம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள சட்டப்படி வேலை தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் திருகோணமலை துறைமுக ஊழியர்களும் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கிணங்க இன்றையதினம் திருகோணமலை துறைமுக வாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக அந்த துறைமுக தொழிற்சங்கத்தில் செயலாளர் ஏ.சி. தொட்டவத்த தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 02/01/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை