இந்தியாவின் தடுப்பூசி; மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு வழங்கத் திட்டம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள 05 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மேல் மாகாணத்திலுள்ளவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் தற்போது கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு வழங்கப்பட்டு  வருவதாக தெரிவித்த அவர், நேற்றைய தினம் நாரஹேன்பிட்ட பகுதியில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்

அதேவேளை, ரஷ்ய உற்பத்தியான ஸ்புட்னிக் தடுப்பூசி மற்றும் சீனாவின் உற்பத்தியான சினோபாம் தடுப்பூசி ஆகியவற்றை பதிவு செய்வதற்கான அனுமதி எதிர்வரும் வாரத்தில் கிடைக்குமென மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைசர் பயோஎக்டெக் தடுப்பூசியை நாட்டில் பதிவு செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 77 ஆயிரத்து 625 பேர் பூரண குணமடைந்து ள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை