புதிய கொரோனா​; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உள்ளூர் பொதுமக்களிடம் ஏற்பட்ட தொற்றில் குறித்த வகை வைரஸ் இல்லை எனவும், இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சைப்ரஸிலிருந்து வருகை தந்தோருக்கு பிரிட்டனில் பரவும் கோரோனா வைரஸின் பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு தொற்றுள்ளமை ஒருவாரத்துக்கு முன்பாக கண்டறியப்பட்டது.

அவர்கள் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் வவுனியாவும் உள்ளடங்குகிறது. உள்ளூர் மக்கள் எவருக்கும் இப் புதிய வகை வைரஸ் இல்லை என்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

சுண்டுக்குளி நிருபர்

Sat, 02/13/2021 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை