தடை கோரிய மனுக்கள் நீதிமன்றுகளால் நிராகரிப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரி மல்லாகம் மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளன.

யாழ். சாவகச்சேரி நீதிமன்றிலும், மல்லாகம் நீதிமன்றிலும் பொலிசார், மேற்படி போராட்டத்துக்கு, கொவிட்19 தொற்றை காரணம்  கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப் பேரணி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதல்ல என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்நாட்டில் சிங்கள, பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுதந்திரதின நிகழ்வில் பேசும்போது நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார்.

அவர், அவ்வாறு கூறியது எங்களுக்கு பிரச்சினையில்லை. எனினும் இந்நாட்டின் ஜனாதிபதி, பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றுவேனென்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதேபோன்று பெரும்பான்மை மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்ற முடியாது. இதன் அடிப்படையில், நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

 

 யாழ். விசேட, யாழ்.குறூப் நிருபர்கள்

Sat, 02/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை